இடுகைகள்

சிறுகதையாற்றுப்படை

சிறுகதை -01 7.1.2026  நாளிட்ட ஆனந்த விகடன் இதழில் இக்கதை வெளிவந்தது.  ஆனந்த விகடன் நூற்றாண்டு இதழில் வெளிவந்த முதல் கதை இது. கதையின் பெயர் மனிதம். எழுதியவர் அசோக்குமார். இக்கதைக்கு பிரேம் டாவின்சி ஓவியம் வரைந்திருந்தார். ஓவியம் செயற்கை மனிதர்களைக் கொண்டிருந்தது.  கணினி முன் மில்லி செகண்ட்,  நிமிடம், மணி ஓடிக்கொண்டிருந்தன. இந்த ஓவியத்தைப் பார்க்கும் யாருக்கும் இக்கதை அறிவியல் புனைவு என்றே நினைக்கத் தோன்றும். அப்படியாகவே எனக்கும் தோன்றியது. மரணத்தை நினைத்து கலக்கமாக இல்லையா? அம்மா அனி வினவுகிறார். வாழ்வதற்கே கலக்கம் இருக்கும். மரணிக்க என்ன பயம்? என்று புன்னகைக்க முயல்கிறான் நியான். உனது வாழ்வை அபகரித்த குற்ற உணர்வு எங்களை நிம்மதியாக இருக்க விடாது என்கிறார் தந்தை லியோ. கதையின் தொடக்கத்தில் மூவருக்குமிடையே நடந்தேறும் உரையாடல்தான் பெருங்கதையாக விரிகிறது. செயற்கை மனிதர்களின் வாழ்நாட்களை அவர்களுக்கும் மேலுள்ள மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள்.  இதன்படி தாய், தந்தை இருவரின் வாழ்நாட்கள் குறைந்துகொண்டே வருகிறது. இப்பொழுது மகன் நியான் மேலிடத்திற்கு மனு செய்கிறான். எனது ...